TNPSC Thervupettagam

ஆசியாவில் ஊடாடும் தொடர்பு மற்றும் நம்பிக்கைக் கட்டமைப்புச் செயல்பாடுகள் குறித்த கருத்தரங்கு (CICA)

September 30 , 2020 1427 days 441 0
  • சமீபத்தில் இந்தியாவின் பங்கேற்புடன் CICA அமைப்பின்  (Conference on Interaction and Confidence-Building Measures in Asia) சிறப்பு அமைச்சரவைக் கருத்தரங்கானது நடத்தப் பட்டது.
  • இது ஆசியாவில் அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைப்புத் தன்மை ஆகியவற்றை ஊக்கப்படுத்தும் வகையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக செயல்படும் அரசாங்கங்களுக்கிடையேயான ஒரு மன்றமாகும்.
  • இந்தக் கருத்தரங்கின் முக்கியக் கருத்துருவானது சிறிய மற்றும் பெரிய நாடுகளின் பாதுகாப்பு, கூட்டு முயற்சி  மற்றும் பரஸ்பர பயன்பாட்டுத் தொடர்பு ஆகியவற்றின் பிரிக்க முடியாத தன்மை என்ற முன்னுரிமையை அடிப்படையாகக் கொண்டது ஆகும்.
  • CICA மாநாடானது CICA செயல்பாடுகளுக்கான விவாதங்களை நடத்துவதற்காகவும் அதன் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்காகவும் முன்னுரிமைகளை நிர்ணயிப்பதற்காகவும் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப் படுகின்றது.
  • வெளியுறவுத் துறை அமைச்சர்களின் சந்திப்பானது 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும்.
  • CICA ஆனது 27 உறுப்பு நாடுகள்; 8 பார்வையாளர் நாடுகள்; 5 பார்வையாளர் அமைப்புகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
  • CICAல் ஒரு நாடு உறுப்பினராக இணைவதற்கு, அந்த நாடு தனது நிலப்பகுதியை ஆசியாவில் கட்டாயம் பகிர்ந்திருக்க வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்