TNPSC Thervupettagam

ஆசிரியர்கள் தினம் - செப்டம்பர் 5

September 8 , 2019 1848 days 481 0
  • இந்தியாவின் முதல் மற்றும் இரண்டாவது துணைக் குடியரசுத் தலைவரும் (1952 - 1962) மற்றும் இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவருமான (1962-1967) டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த தினத்தின் நினைவாக ஆண்டுதோறும் செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப் படுகின்றது.
  • இந்தியா போன்ற மக்களாட்சி நாட்டில் ஆசிரியர்கள் மற்றும் கல்வியின் முக்கியத்துவம் குறித்து டாக்டர் ராதாகிருஷ்ணன் “நவீன இந்தியாவில் அரசியல் சிந்தனையாளர்கள்என்ற அவரது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
  • இவர் 1954 ஆம் ஆண்டு பாரத் ரத்னா விருது பெற்றார்.
  • இவர் Helpage India என்ற இந்தியாவின் நலிந்த முதியோர்களுக்கான இலாப நோக்கமற்ற அமைப்பை ஏற்படுத்திய நிறுவனர்களில் ஒருவர் ஆவார்.
  • உலகளவில் ஆசிரியர்கள் தினம் அக்டோபர் 5 அன்று கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் 1962 ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 5 அன்று இந்நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகின்றோம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்