TNPSC Thervupettagam
April 9 , 2020 1695 days 661 0
  • டைனோசரஸ் காலத்தைச் சேர்ந்த ஒரு நவீன காலப் பறவையின் மிகப் பழமையான புதைபடிவம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • இந்தச் சிறிய புதைபடிவமானது “ஆச்சரியக் கோழி” என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • இது நெதர்லாந்தின் மாஸ்ட்டிரிச்சிற்கு அருகிலுள்ள சிண்ட்-பீட்டர்ஸ்பெர்கின் சுண்ணாம்புக் கல்லில் காணப் பட்டது. 
  • இது 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும்.
  • இது எந்தவொரு காலத்திலும் இல்லாத வகையில் சிறந்த முறையில் பாதுகாக்கப் பட்ட புதைபடிவ பறவை மண்டையோடுகளில் ஒன்றாக உள்ளது.
  • இந்தப் புதைபடிவமானது தற்காலத்தியப் பறவைகளின் முந்தைய இனங்கள் எப்போது மற்றும் எப்படி உருவானது என்பதைக் கண்டறிய ஒரு சிறந்த ஆதாரமாக விளங்குகின்றது. 
  • மாஸ்ட்டிரிட்ச் நகரமானது மாஸ்ட்டிரிட்ச் ஒப்பந்தத்திற்காகவும் 1992 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட யூரோ நாணயத்தின் பிறப்பிடமாகவும் புகழ்பெற்று விளங்குகின்றது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்