அசாம் மாநிலம் நாட்டின் பழங்குடி இனமக்களின் கலாச்சாரத்தைக் கொண்டாட (to celebrate) “ஆடி மஹோத்சவம்” எனும் விழாவை, கௌஹாத்தியில் உள்ள காந்தி மந்திர் உள்விளையாட்டு அரங்கில் நடத்தியது.
10 நாட்கள் கொண்டாடப்படும் இந்த விழாவை இந்திய பழங்குடி கூட்டுறவு விற்பனை மேம்பாட்டுக் கூட்டமைப்பு (Tribal Cooperative Marketing Development Federation of India – TRIFED), பழங்குடியினர் விவகாரங்கள் துறை அமைச்சகத்தோடு இணைந்து நடத்தியது.
இந்த விழா, பழங்குடி மக்களின் அரிய கலை மற்றும் கலாச்சாரத்தைக் கொண்டாடுவதற்காக நடத்தப்பட்டது.
TRIFED ஆனது, பல மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டம் 1984ன் (தற்பொழுது பல மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டம், 2002) கீழ் அப்போதைய நலத்துறை அமைச்சகத்தால் (Ministry of Welfare) ஆகஸ்ட் 1987 அன்று ஏற்படுத்தப்பட்டது.