TNPSC Thervupettagam

ஆடிகள் நிலை நிறுத்தப்படுதல்

January 17 , 2022 952 days 398 0
  • நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி குழுவானது, அதனுடைய 21 அடி தங்க முலாம் பூசப்பட்ட முதன்மை ஆடிகளை முழுமையாக நிலைநிறுத்தியுள்ளது.
  • அறிவியல் செயல்பாடுகளுக்குத் தேவையான அனைத்து முக்கிய விண்கலங்கள் மீதான நிலை நிறுத்துதலின் இறுதிக் கட்டத்தை இது வெற்றிகரமாக நிறைவு செய்து உள்ளது.
  • வெப் ஆய்வுப் பணி (Webb mission), நமது சூரியக் குடும்பத்தில் இருந்து ஆரம்பகால பிரபஞ்சத்தில் உள்ள மிகத் தொலைவில் உள்ள ஆய்வு மேற்கொள்ளக் கூடிய விண்மீன் திரள்கள் வரையில், பிரபஞ்ச வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்தையும் ஆராயும்.
  • அதன் அகச்சிவப்பு என்ற தொழில்நுட்பமானது 13.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவான முதல் நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் திரள்களையும் ஆய்வு செய்ய வழி வகுக்கும்.
  • இது உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் சிக்கலான விண்வெளி அறிவியல் தொலை நோக்கி ஆகும்.
  • இது நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) மற்றும் கனடிய விண்வெளி நிறுவனம் ஆகியவற்றின் ஒரு கூட்டு முயற்சியாகும்.
  • வெப் தொலைநோக்கி ஹப்பிள் தொலைநோக்கியின் வழித் தோன்றல் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்