அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையமானது இந்த அறிக்கையை வெளியிட்டது.
2021 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் ஏற்பட்ட மோதல் மற்றும் வன்முறைகளின் காரணமாக 33 நாடுகளில் 50.9 மில்லியன் மக்கள் உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்து உள்ளனர் என்று இந்த அறிக்கை கூறுகிறது.
84 மில்லியனைக் கடந்த அளவில் உலகளாவிய எண்ணிக்கையுடன் அதிகரித்து வரும் சூழ்நிலைக் கட்டாயத்தினால் இடம் பெயரும் போக்கானது (2020 ஆம் ஆண்டிலிருந்து) 2021 ஆம் ஆண்டிலும் தொடர்ந்தது.
2020 ஆம் ஆண்டின் இறுதியிலிருந்த 82.4 மில்லியன் என்ற அளவிலிருந்து இந்த எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
இது பெரும்பாலும் உள்நாட்டு இடம் பெயர்தலால் ஏற்பட்டதாகும்.
புதிய உள்நாட்டு இடம்பெயர்தலில் பெரும்பாலானவை ஆப்பிரிக்காவில் நிகழ்ந்தன.