குரோஷியாவின் அணித் தலைவர் மற்றும் ஸ்பானிஷ் கிளப் ரியல் மாட்ரிட் அணியின் மிட் பீல்டரான லூகா மோட்ரிக் ஆடவர் டென்னிஸ் உலகத் தரவரிசையின் முதலிட ஆட்டக்காரான நோவாக் ஜோகோவிக்கை முந்தி ஆண்டின் சிறந்த பால்கன் தடகள வீரராகியுள்ளார்.
பால்கனின் வாக்கெடுப்பில் செர்பியன் நாட்டு வீரரான நோவோக் ஜோகோவிக் இரண்டாவது இடத்தையும் மகளிர் டென்னீஸ் போட்டியின் முதலிட ஆட்டக்காரரான ரோமானிய நாட்டவரான சிமோனா ஹாலெப் 3-வது இடத்தையும் பிடித்தனர்.