சுனில் சேத்ரி மற்றும் மனிஷா கல்யாண் ஆகியோர் முறையே 2021-22 ஆம் ஆண்டிற்கான சிறந்தக் கால்பந்தாட்ட வீரராகவும், சிறந்தக் கால்பந்தாட்ட வீராங்கனையாகவும் தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.
இதனை அகில இந்தியக் கால்பந்தாட்டப் போட்டி கூட்டமைப்பு (AIFF) அறிவித்துள்ளது.
கடந்த போட்டித் தொடரிற்கான ஆண்டின் சிறந்த வளர்ந்து வரும் கால்பந்தாட்ட வீராங்கனை என்ற பட்டத்தினை மனிஷா வென்றிருந்தார்.
சுனில் இந்த விருதை பெறுவது இது 7வது முறையாகும்.
இவர் இதற்கு முன்பு 2007, 2011, 2013, 2014, 2017 மற்றும் 2018-19 ஆகிய ஆண்டுகளில் இந்த விருதினை வென்றுள்ளார்.