TNPSC Thervupettagam

ஆண்டின் ராணுவப் பாலின ஆதரவாளர் விருது

May 31 , 2020 1519 days 756 0
  • சமீபத்தில் இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மகளிர் அமைதிப் படையினர் கூட்டாக 2019 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் ராணுவப் பாலின ஆதரவாளர் விருதினை வென்றுள்ளனர்.
  • இந்திய ராணுவத்தைச் சேர்ந்த தளபதி சுமன் கவானி மற்றும் பிரேசிலைச் சேர்ந்த கார்லா மோன்டியிரோ டி கேஸ்ட்ரோ அராஜோ என்ற கமாண்டர் ஆகியோர் இந்த விருதிற்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.
  • இந்த விருதினைப் பெறும் முதலாவது இந்தியர் தளபதி சுமன் கவானி ஆவார்.
  • இந்த விருது 2016 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப் பட்டது.
  • இது ஐக்கிய நாடுகள் பாதுகாப்புத் தீர்மானத்தின் கொள்கைகளை ஊக்குவிக்கும் ராணுவ அமைதிப் படைவீரரின் (தனிநபர்) அர்ப்பணிப்பு மற்றும் முயற்சிகளை அங்கீகரிக்கின்றது.
  • தெற்கு சூடானில் ஐக்கிய நாடுகள் அமைதித் திட்டமானது சமீபத்தில் விடுதலை பெற்ற தெற்கு சூடானிற்கான புதிய ஐக்கிய நாடுகள் அமைதிப் படைத் திட்டமாகும். இந்த நாடு 2011 ஆம் ஆண்டு ஜூலை 09 அன்று விடுதலை பெற்றது.
  • இது 1996 ஆம் ஆண்டின் ஐக்கிய நடுகள் பாதுகாப்புச் சபை தீர்மானத்தின் கீழ்  2011 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்