ஆசியப் பத்திரிக்கையாளர் சங்கத்தினால் உஸ்பெகிஸ்தானின் அதிபரான சாவ்காத் மிர்சியோயேவ் 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆசியராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மத்திய ஆசிய நாடுகளுக்கிடையே சமாதானத்தை நிலைநாட்டவும் அவற்றுக்கிடையேயான தொடர்புகளை மேம்படுத்தவும் முயன்றமைக்காக அரசியல்வாதிகள் பிரிவில் உஸ்பெகிஸ்தானின் அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அதிபராக பதவியேற்ற பின் இவர் அதன் பொருளாதாரத்தை வெளிநாட்டினர் அணுகவும் மனித உரிமைகளை மேம்படுத்தவும் அரசியல் கைதிகளை விடுவிக்கவும் தேவையான கொள்கைகளைச் சீரமைத்தார்.
மற்ற இதர வெற்றியாளர்கள் பின்வருமாறு
கூ போன் மூ - LG குழுமத்தின் மறைந்த தலைவர்
பார்க் ஹாங் - சியோ - வியட்நாம் தேசிய கால்பந்து அணிக்கான கொரியாவைச் சேர்ந்த பயிற்சியாளர்.
மக்தி ஹபீப் யாகூப் - எகிப்திய மார்பக சார் அறுவை சிகிச்சை நிபுணர்.