புது தில்லியில் நடைபெற்ற இந்திய வணிகத் தலைவருக்கான விருதுகள் (India Business Leader Awards - IBLA) நிகழ்ச்சியில் வணிகத் தலைவர் என்ற பிரிவின் கீழ் - ஆண்டிற்கான மாநில விருதை சத்தீஸ்கர் மாநிலம் வென்றுள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் வணிகம் சம்பந்தமான பல்வேறு கொள்கைகளை சீரிய முறையில் எடுத்து திறம்பட செயலாற்றியமைக்காக சத்தீஸ்கருக்கு இவ்விருது அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா வணிகத் தலைவர் விருதுகள் செய்தி நிறுவனமான சிஎன்பிசி-டிவி 18 (CNBC-TV18) என்ற நிறுவனத்தால் நடத்தப்பட்டது.
குறிப்பிடும் படியாக, உலக வங்கியின் வணிக முறை எளிதாக்கல் (Ease of Doing Business) என்ற பட்டியலில் சத்தீஸ்கர் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.