TNPSC Thervupettagam

ஆண்ட்பாட் இயந்திர மனிதன்

February 22 , 2019 2104 days 631 0
  • தனது சுற்றுச்சூழலை ஆராயவும் புவியிடங்காட்டி (GPS) அல்லது வரைபடம் ஆகியவற்றின் உதவியில்லாமல் தனது வீட்டிற்கான வழியை அறியும் முதலாவது நடக்கும் இயந்திர மனிதனை வடிவமைத்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
  • தன்னியக்க வாகனங்களின் பயணத்திற்கான ஒரு புது வழியை இது ஏற்படுத்தியுள்ளது.
  • இந்த ஆண்ட்பாட்டை வடிவமைப்பதற்காக பிரெஞ்சு தேசிய அறிவியல் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மிகச் சிறந்த தனித்துவ பணியாளர்களான பாலைவன எறும்புகளிடமிருந்து ஊத்வேகத்தைப் பெற்று இதை வடிவமைத்துள்ளனர்.
  • எறும்புகள் வெளி இடங்களில் தங்களை அறிவதற்காக சிதறடிக்கப்பட்ட ஒளி மற்றும் புறஊதாக் கதிர்வீச்சு ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றன.
  • பாலைவன எறும்புகளின் தனித்துவ பயணத் திறன்களைப் போல், ஆண்ட்பாட் ரோபோட் புவியிடங்காட்டியின் உதவியில்லாமல் இடத்தை ஆராய அதன் தொழில்நுட்பம் அதற்கு உதவுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்