ஆதார் அட்டைகள் மற்றும் அவற்றின் டிஜிட்டல் பிரதிகள் ஆனது, தற்போது பிரதானமாக, “அடையாளச் சான்று" ஆக மட்டுமே குறிப்பிடப்படுகின்ற நிலையில், அவற்றைக் குடியுரிமை அல்லது பிறப்பு தேதிக்கான சான்றாக குறிப்பிட முடியாது.
எனவே, இனிமேல் குடியுரிமை அல்லது வயதை உறுதிப்படுத்த ஆதார் அட்டையினைப் பயன்படுத்தக் கூடாது.
வெளிநாட்டினர் கூட இந்தியாவில் 6 மாதங்கள் தங்கிய பிறகு ஆதார் அட்டையினைப் பெற இயலும்.
ஆதார் என்பது இந்தியக் குடிமக்களின் தனித்துவமான அடையாளம் மற்றும் அவரது வசிப்பிடத்திற்கான சான்றாக மட்டுமே விளங்குகிறது.