TNPSC Thervupettagam

ஆதி காலத்தில் இருந்து இருக்கின்ற கருந்துளை (PBH)

April 16 , 2020 1559 days 642 0

 

  • ஆதி காலத்தில் இருந்து இருக்கின்ற கருந்துளை (PBH - Primordial Black Hole) குறித்த ஒரு சமீபத்திய ஆய்வானது, குறைந்த அளவிலான உள்ளூர ஆற்றலின் அதிகரிப்பானது பல்வேறு PBHகளின் உருவாக்கத்திற்கு வழி வகுத்துள்ளது என்பதையும் PBH ஆனது மிகவும் வலிமையான ஈர்ப்பு அலைகளை வெளியிட்டுள்ளது என்பதையும் உறுதிப்படுத்தி உள்ளது. 
  • PBH ஆனது பெருவெடிப்புக் காலக்கட்டத்தின் போது உருவானதாகும்.
  • PBH ஆனது 3000 கிலோ மீட்டர்கள் அளவு மிகப் பெரியதாகவோ அல்லது ஒரு அணுவின் உட்கருவைப் போன்று மிகச் சிறியதாகவோ உள்ளது.
  • மிகப்பெரிய நட்சத்திரங்கள் மோதிக் கொள்வதனால் இவை உருவாகி விடும் என்பதற்கு மாறாக, பிற எந்தவொரு கருந்துளைகளைப் போன்றே இவையும் கதிர்வீச்சுகள் ஒன்றோடொன்று கலந்ததன் விளைவாக உருவாகியுள்ளது என்று நம்பப் படுகின்றது.
  • பிரபஞ்சம் வேகமாக விரிவடைந்து கொண்டிருந்த சமயத்தின் போது  பிரபஞ்சத்தின் உள்ளூர ஆற்றல் நிலையில் ஏற்பட்ட சிறிய மோதலின் விளைவாக PBHகள் ஆனவை உருவாக்கப் பட்டன.
  • பெருவெடிப்பிற்குப் பிறகு பிரபஞ்சமானது தனது அசல் அளவை விட 10^27  மடங்கு என்ற அளவில் விரிவடைந்துள்ளது. 
  • இது அண்ட விரிவடைந்த நிலை நிறைவு பெற்ற பிறகான 1 வினாடிக்குள் நிகழ்கின்றது.
  • இதன் பிறகு, ஈர்ப்பு விசையினால் கொள்ளப் பட்டுள்ள மீதியுள்ள ஆற்றலானது புரோட்டான், எலக்ட்ரான், நியூட்ரான் மற்றும் இதர துகள்களைத் தவிர போட்டான்களாகவும் (எடை குறைந்த) மாற்றம் பெறுகின்றன.
  • அண்ட விரிவடை நிலையின் போது பிரபஞ்சம் அதிவேகமாக விரிவடைந்துக் கொண்டிருக்கும் சமயத்தில், இது சிறிய குவாண்டம் அதிர்வுகளுக்கிடையே செலுத்தப் படுகின்றது.
  • ஒரு குறிப்பிட்ட முறையில் வெளியிடப் படுகின்ற இந்த அதிர்வுகள் விண்மீன் திரள்கள் மற்றும் நட்சத்திரங்களை மெதுவாக அதே சமயம் கூடுமானவரை மிகப்பெரிய அளவில் உருவாக்குகின்றன. எனவே ஆற்றலில் வெகுவாக அதிகரிப்பு ஏற்படுகின்றது. 
  • அவைகளில் குறிப்பிடத்தக்க அளவில் மிகப்பெரியதாக உள்ளவை PBHகள் உருவாக உதவுகின்றன.
  • ஆற்றல் அதிகரிப்பானது பின்பு மிகவும் வலிமையான ஈர்ப்பு அலைகளைத் தவிர PBHகளையும்  உருவாக்குகின்றது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்