தமிழ்நாடு அரசானது, தனது மாநில அளவிலானப் பழங்குடியினர் நல வாரியத்தை மறுசீரமைத்துள்ளது.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர், இந்த வாரியத்தின் அதிகாரப் பூர்வத் தலைவராக செயல்படுவார்.
இந்தக் குழுவில் எட்டு அதிகாரப்பூர்வ மற்றும் 17 அதிகாரப்பூர்வமற்ற (அலுவல் சாராத) உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.
கல்வி, பொருளாதார மேம்பாடு மற்றும் சமூக நலன் ஆகிய துறைகளில் பட்டியலிடப் பட்ட பழங்குடியினரின் ஒட்டு மொத்த மேம்பாட்டிற்காக 2007 ஆம் ஆண்டில் இக்குழு முதலில் அமைக்கப்பட்டது.