TNPSC Thervupettagam

ஆதிச்சநல்லூரில் நாணயங்கள் கண்டெடுப்பு

April 7 , 2022 967 days 836 0
  • கடல் ஆமையின் சின்னங்கள் பொறிக்கப்பட்ட இரண்டு சங்க கால முத்திரைக் காசுகள் கண்டெடுக்கப்பட்ட ஒரு நிகழ்வானது ஆதிச்சநல்லூரின் தொல்லியல் வரலாற்றிலேயே  முதன்முறையாகும்.
  • தூத்துக்குடி மாவட்டத்தின் ஸ்ரீவைகுண்டம் தாலுக்காவிலுள்ள தாமிரபரணியின் கடை மட்டப் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்த வரலாற்றுத் தளம் அமைந்துள்ளது.
  • ஆதிச்சநல்லூர் என்பது முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டதால் இது பண்டைய காலப் புதையிடமாக பெரும்பாலும் அறியப்பட்டது.
  • 1876 ஆம் ஆண்டில் டாக்டர் ஜகோர் எனும் ஒரு ஜெர்மானியத் தொல்லியலாளர் முதல் முறையாக இந்த இடத்தினைக் கண்டறிந்தார்.
  • சமீபத்தியக் கண்டுபிடிப்புகளைக் கொண்டு (முத்திரைக் காசுகள்) ஆதிச்சநல்லூர் என்பது நாணயங்கள் தயாரிக்கும் இடமாக இருந்திருக்கலாம் அல்லது மனிதர்கள் ஆரம்பக் கட்டத்தில் குடியேறிய இடங்களில் ஒன்றாக இருந்திருக்கலாம் எனத் தொல்லியல் ஆய்வுகள் கூறுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்