TNPSC Thervupettagam

ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகத்திற்கான அடிக்கல்

August 7 , 2023 477 days 409 0
  • ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகத்துக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார்.
  • இது தொல்லியல் தளத்திலேயே நிறுவப்பட உள்ள இந்தியாவின் முதல் தொல்பொருள் அருங்காட்சியகம் ஆகும்.
  • இங்கு 3,000 ஆண்டுகள் பழமையான கலைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்படும்.
  • தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் என்னுமிடத்தில் இந்தியத் தொல்லியல் துறை நடத்திய அகழ்வாராய்ச்சியில் ஏராளமான முதுமக்கள் தாழிகள், உலோகம் மற்றும் வெண்கலத்திலானப் பொருட்கள் மற்றும் ஒரு தங்க வைரம் கூட கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
  • 1876 ஆம் ஆண்டிலேயே ஆதிச்சநல்லூரில் அகழாய்வுகள் தொடங்கப்பட்டாலும், 145 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று இது அடையாளம் கண்டறியப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்