TNPSC Thervupettagam

ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆய்வு தளம்

October 12 , 2021 1145 days 2281 0
  • இந்திய தொல்லியல் துறையானது 17 ஆண்டு கால நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆய்வுத் தளத்தில் அகழ்வாராய்ச்சியை மீண்டும் தொடங்க உள்ளது.
  • இது தூத்துக்குடி மாவட்டத்தில் பாயும் தாமிரபணி ஆற்றின் கரையில் 125 ஏக்கருக்கும் மேலான பரப்பளவில் அமைந்துள்ளது.
  • 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த ஓர் அருங்காட்சியகத்தை நிறுவ மத்திய அரசு திட்டமிட்டது.
  • ஆதிச்சநல்லூர் தளமானது 1876 ஆம் ஆண்டில் ஜெர்மன் நாட்டுத் தொல்லியல் ஆர்வலர் டாக்டர் ஜகோர் என்பவரால் முதன்முதலில் அகழாய்வு செய்யப்பட்டது.
  • பிரிட்டீஷ் இந்தியாவின் தொல்லியல் துறை மேற்பார்வை பொறியாளர் அலெக்சாண்டர் ரியா 1899 மற்றும் 1905 ஆகிய  ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்தத் தளத்தில் அகழாய்வு மேற்கொண்டார்.
  • இந்தியத் தொல்லியல் துறையின் மேற்பார்வை தொல்லியல் ஆய்வாளர் டாக்டர் சத்தியமூர்த்தி என்பவரும், 2004 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்தத் தளத்தில் ஆய்வினை மேற்கொண்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்