தூத்துக்குடி மாவட்டத்தின் ஆதிச்சநல்லூரிலிருந்து கண்டெடுக்கப்பட்ட மாதிரிகளின் கார்பன் காலக் கணிப்பின் மூலம் இந்த மாதிரிகள் கி.மு. 905 முதல் கி.மு. 696ற்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொல் கைவினைப் பொருட்களின் கார்பன் காலக் கணிப்பானது அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள பீட்டா அனலடிக் பரிசோதனை ஆய்வகத்தில் நடைபெற்றது.
தமிழ் எழுத்துருக்களைக் கொண்ட இந்தத் தொல் கைவினைப் பொருட்களின் மூலம் தமிழ் மொழி பிராகிருத மொழியை விடப் பழமையானது என்பதை உறுதி செய்ய முடியும். மேலும் இதன் காலம் கி.மு. 268 முதல் கி.மு. 232 வரை ஆகும்.