TNPSC Thervupettagam

ஆதித்யா L1 ஆய்வுத் திட்டம்

September 3 , 2023 321 days 273 0
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆனது, சூரியனை ஆய்வு செய்வதற்காக என்று அதன் முதல் விண்வெளிப் பயணத்திற்கான ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தினை விண்ணில் செலுத்தியுள்ளது.
  • இந்த சூரிய ஆய்வுக்கலம் ஆனது ‘XL’ வகை கட்டமைப்பில் துருவச் செயற்கைக்கோள் ஏவுகலன் (பிஎஸ்எல்வி) மூலம் விண்வெளிக்குக் கொண்டு செல்லப்பட்டது.
  • இந்த ஏவுகலனில், ஆறு நீட்டிக்கப்பட்ட உந்துவிசை வழங்கீட்டு மோட்டார்கள் பொருத்தப் பட்டிருப்பதால், இது 'XL' வகை கட்டமைப்பில் உள்ள மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகலன் இதுவாகும்.
  • பிஎஸ்எல்வி-XL ஏவுகலனானது 1,750 கிலோ எடை வரை உள்ள சாதனங்களைச் சூரிய ஒத்திசைவு துருவச் சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்லக் கூடியது.
  • இந்த விண்கலம் ஆனது இறுதியாக சூரியன்-பூமி அமைப்பின் முதலாம் லெக்ரேஞ்ச் புள்ளியைச் (L1) சுற்றி ஒரு ஒளி வட்டப் பாதையில் நிலை நிறுத்தப் படும்.
  • இது பூமியில் இருந்து சுமார் 1.5 மில்லியன் கி.மீ. தொலைவில் உள்ளது.
  • ஆதித்யா L1 விண்கலமானது L1 புள்ளியினைச் சுற்றிய அதன் பயணத்தைச் சுமார் நான்கு மாதங்களில் முழுமையாக நிறைவு செய்யும்.
  • ஆதித்யா L1 விண்கலத்தில் முக்கியமாக ஏழு சாதனங்கள் உள்ளன.
  • சூரியனைப் பற்றிய நாம் அறிந்தத் தகவல்களை விரிவுபடுத்துவதும், அதன் கதிர்வீச்சு, வெப்பம், துகள்களின் பாய்வு மற்றும் காந்தப்புலங்கள் நம்மை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்து அறிவதும் இந்த ஆய்வுத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
  • லெக்ரேஞ்ச் புள்ளிகள் என்பது வானியல் அமைப்புகளின் ஈர்ப்பு விசையானது விண்வெளியில் உள்ள மூன்றாவது சிறிய அமைப்பினை அதன் சுற்றுப்பாதையில் நிலைத்திருக்க வைக்கத் தேவையான மையவிலக்கு விசைக்குச் சமமான விசையைக் கொண்டு உள்ள புள்ளிகள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்