ஆதித்யா-L1 கலத்தின் மூலம் கொண்டு செல்லப்பட்ட VELC கருவி மூலம் பெறப்பட்ட தனிப்பட்ட தரவைப் பயன்படுத்தி, சூரிய வெப்ப உமிழ்வு (CME) நிகழ்வின் தொடக்க நேரத்தைத் துல்லியமாக மதிப்பிட முடியும்.
இந்தியாவின் சூரிய ஆய்வுக் கலத்தின் முதல் அறிவியல் பூர்வ முடிவை இது மிக நன்கு குறிக்கிறது.
சூரியனின் புலப்படும் பகுதியின் வெப்ப உமிழ்வுக் கரோனா அடுக்கு ஆய்வுக் கருவி (VELC) ஆனது சூரியனின் மேற்பரப்புக்கு அருகில் உள்ள சூரிய வெப்ப உமிழ்வு (CME) நிகழ்வினை நெருக்கமாகக் கண்காணிக்க உதவுகிறது.