TNPSC Thervupettagam

ஆதித்யா சூரியக் காற்று துகள் பரிசோதனை (ASPEX)

December 8 , 2023 354 days 231 0
  • இது சூரியனை ஆராய்வதற்காக ஏவப்பட்ட இந்தியாவின் ஆதித்யா-எல்1 செயற்கைக் கோளில் உள்ள ஒரு உபகருவி (பேலோட்) ஆகும்.
  • இது அதன் செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளது.
  • இது சூரியக் காற்றின் துகள்களை ஆய்வு செய்வதற்காக வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • இது அயனியாக்கம் செய்யப்பட்ட மூலக்கூறுகளைப் பிரித்து அடையாளம் காணும் பகுப்பாய்வு  கருவி (SWIS) மற்றும் சுப்ரா வெப்ப மற்றும் ஆற்றல் துகள் நிறமாலை (STEPS) போன்ற கருவிகளைக் கொண்டுள்ளது.
  • SWIS என்பது சூரியனில் இருந்து மின்னேற்றம் செய்யப்பட்ட துகள்களை (அயனிகள்) அளவிடுவதன் மூலம் இது ஒரு பரந்த பார்வையை வழங்குகிறது, அதே நேரத்தில் STEPS சூரியனால் உமிழப்படும் உயர் ஆற்றல் துகள்களைப் படிப்பதில் பெரும் கவனம் செலுத்துகிறது.
  • விண்வெளி வானிலை மற்றும் பூமியில் உள்ள தகவல் தொடர்பு அமைப்புகள் மற்றும் மின் கட்டங்களில் அதன் சாத்தியமான தாக்கத்தைப் புரிந்து கொள்வதில் ASPEX ஒரு முக்கியப் பங்கினை வகிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்