2022 ஆம் ஆண்டு ஆதிவாசி வாழ்வாதார அறிக்கை என்ற தலைப்பிலான அறிக்கை PRADAN எனப்படும் இலாப நோக்கற்ற அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளது.
SAL அறிக்கைகளின் நோக்கம் ஆனது, இந்தியாவின் மத்திய மண்டலத்தில் உள்ள பட்டியலிடப்பட்ட பழங்குடியினரின் வாழ்வாதாரத்தின் நிலையைப் புரிந்து கொள்வது ஆகும்.
மத்தியப் பிரதேசத்தில், 51 சதவீதம் ஆதிவாசிகள், 63 சதவீதம் ஆதிவாசிகள் அல்லாதோர், மற்றும் 50 சதவீதம் எளிதில் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்கள் (PVTG) உள்ள கிராமங்கள் பொது விநியோகத் திட்ட விற்பனை நிலைய மையங்களைக் கொண்டுள்ளன.
சத்தீஸ்கரில், இது 63 சதவீதம், 88 சதவீதம் மற்றும் 36 சதவீதம் ஆக உள்ளது.
சாலை இணைப்பைப் பொறுத்தவரை, 78 சதவீத ஆதிவாசிகள், 79 சதவீத ஆதிவாசிகள் அல்லாதோர், மற்றும் 80 சதவீத PVTG கிராமங்கள் ஆனது, மத்தியப் பிரதேசத்தில் உள்ள அனைத்து வானிலைகளிலும் செயல்படும் வகையிலான சாலைகள் மூலம் மண்டல தலைமையகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
சத்தீஸ்கரில், இது 80 சதவீதம், 100 சதவீதம் மற்றும் 82 சதவீதம் ஆக உள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள 42 சதவீத ஆதிவாசிகள், 63 சதவீதம் ஆதிவாசிகள் அல்லாதோர் மற்றும் 80 சதவீத PVTG கிராமங்கள் பொதுப் போக்குவரத்து மூலம் மண்டல தலைமையகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
சத்தீஸ்கர் மாநிலத்தில் இவை முறையே 30 சதவீதம், 40 சதவீதம் மற்றும் 9 சதவீதம் ஆக உள்ளது.
மத்தியப் பிரதேசத்தில், 32 சதவீத ஆதிவாசி குடும்பங்களும், 27 சதவீத ஆதிவாசிகள் அல்லாதோர் குடும்பங்களும், 61 சதவீத PVTG குடும்பங்களும் கடுமையான உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கரில், 27 சதவீத ஆதிவாசி குடும்பங்கள், 42 சதவீத ஆதிவாசிகள் அல்லாதோர் குடும்பங்கள், மற்றும் 29 சதவீத PVTG குடும்பங்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.