TNPSC Thervupettagam

ஆத்தூர் வெற்றிலை சாகுபடி

March 13 , 2025 21 days 98 0
  • கடுமையானப் பூச்சி தாக்குதல் மற்றும் கணிக்க முடியாத பருவநிலை மாற்றம் காரணமாக ஆத்தூர் (ஆத்தூர் வெற்றிலை) பகுதியில் பிரபலமான வெற்றிலை சாகுபடி கடந்த ஓராண்டாக குறைந்து வருகிறது.
  • பருவநிலையானது, நல்ல விளைச்சலை உற்பத்தி செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது மற்றும் அதில் ஏற்படும் எந்தவொரு இடையூறும் உற்பத்தியினை கணிசமான அளவில் பாதிக்கிறது.
  • தனித்துவமான காரச் சுவைக்குப் பெயர் பெற்ற 'ஆத்தூர் வெற்றிலை' ஆனது 2022 ஆம் ஆண்டில் புவிசார் (GI) குறியீட்டினைப் பெற்றது.
  • இந்த இலைகளின் ஒரு தனித்துவமான சுவையானது, பிராந்தியத்தின் மண் அமைப்பு, பருவ நிலை சூழல்கள் மற்றும் 'தென்கால் பாசன' முறையினைப் பயன்படுத்தி பெறப் படும் நீர்ப்பாசனம் ஆகியவற்றால் உருவாகிறது.
  • இது தாமிரபரணி ஆற்றில் இருந்து வரும் பாசன கால்வாயின் ஒரு கிளையாகும்.
  • விவசாயிகள் பெருமளவில் 'சக்கை, 'மாத்து,' 'பயிற்றாசி,' 'முதுகால்ராசி,' 'பயிர்சாதா' மற்றும் 'முதுகால்'  ஆறு வகையான வெற்றிலைகளை உற்பத்தி செய்கிறார்கள்.
  • இவற்றில் ‘சக்கை’ மற்றும் ‘மாத்து’ ஆகியவை மற்ற மாநிலங்களின் சந்தைகளுக்கு, குறிப்பாக இந்தியாவின் வட பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்