அதிக மதிப்புள்ள தோட்டக்கலைப் பயிர்களை உருவாக்குவதற்காக வேண்டி நோய்த் தாக்கமற்ற, தரமான தாவரப் பொருள் கிடைக்கப் பெறுவதனை அதிகரிப்பதற்காக, ஆத்மா நிர்பர் தூயத் தாவரத் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
ஒரு தூய்மையான தாவரம் என்பது நடவு செய்வதற்கு முன் பல பரிமாணங்களில் சோதிக்கப் பட்ட ஒரு தாவரமாகும்.
முதலில், தாவரங்களில் நோய்க் கிருமிகளால் பாதிக்கப்பட்டுள்ளனவா என சோதிக்கப் படுகின்றன.
இரண்டாவதாக, செழுமையாக வளர்ந்து வரும் தாவரங்கள் அடையாளம் காணப் படுகின்றன.
செழுமையாக வளரும் தாவரங்களிலிருந்து திசு மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன.
இந்த திசுக்கள் மற்ற தாவரங்களுடன் இணைக்கப்பட்டு அவற்றின் உற்பத்தித் திறனும் அதிகரிக்கப் படுகின்றன.