TNPSC Thervupettagam

ஆத்மநிர்பர் பிரச்சாரம் – 3வது நிதித் தொகுப்பு

May 20 , 2020 1653 days 688 0
  • மூன்றாவது நிதித் தொகுப்பானது விவசாயம் மற்றும் வேளாண் சார்ந்த நடவடிக்கைளுக்கு வேண்டி ஒதுக்கப் பட்டுள்ளது.
  • ஏறத்தாழ 1 இலட்சம் கோடியானது வேளாண் பொருள் உற்பத்தி அமைப்பு மற்றும் கூட்டுறவுச் சங்கங்களுக்காக ஒதுக்கப் பட்டுள்ளது.
  • ரூ.10,000 கோடியானது குறு உணவு நிறுவனங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இது தொகுப்பு அடிப்படையிலான அணுகுமுறையில் செயல்பட இருக்கின்றது.
  • இந்த முன்னெடுப்பின் கீழ் காஷ்மீர் கும்குமப்பூவின் மீதும் பீகார் மக்கானாவின் மீதும் தமிழ்நாடு மரவள்ளிக் கிழங்கின் மீதும் கர்நாடகா கேழ்வரகின் மீதும் ஆந்திரப் பிரதேசம் மிளகாயின் மீதும் கவனம் செலுத்த முடியும். 
  • மத்திய அரசானது மீன்களின் மீதான மதிப்புச் சங்கிலியில் உள்ள சிக்கலான இடைவெளியைக் குறைப்பதற்கு வேண்டி கடல்சார் மற்றும் உள்நாட்டு மீன்வளத் துறைகளின் ஒருங்கிணைந்த, நீடித்த, பிரத்தியேக வளர்ச்சிக்காக பிரதான் மந்திரி மத்சயா சம்பாதா யோஜனா என்ற ஒரு திட்டத்தைத் தொடங்க இருக்கின்றது.
  • பசுமை நடவடிக்கையானது தக்காளி, வெங்காயம், உருளைக் கிழங்கு ஆகியவற்றிலிருந்து அனைத்துப் பயிர்களுக்கும் நீட்டிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்