TNPSC Thervupettagam

ஆந்திரப் பிரதேசத்தில் அமைய உள்ள 3 தலைநகரங்கள்

January 25 , 2020 1680 days 893 0
  • ஆந்திரப் பிரதேச மாநிலச் சட்டமன்றமானது அம்மாநிலத்தில் மூன்று தலைநகரங்களை நிறுவுவதற்கான மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
  • விசாகப்பட்டினத்தில் நிர்வாகத் தலைநகரம், அமராவதியில் சட்டமன்றத் தலைநகரம் மற்றும் கர்னூலில் நீதித்துறைத் தலைநகரம் ஆகிய மூன்று தலைநகரங்களை உருவாக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
  • 2014 ஆம் ஆண்டில் தெலுங்கானா ஆந்திராவில் இருந்து பிரிக்கப்பட்ட போது, ஹைதராபாத் ஆனது இரு மாநிலங்களின் கூட்டுத் தலைநகராக, அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது.
  • சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக இருந்த போது, அமராவதியை ஆந்திராவின் தலைநகராக மாற்றுவதற்கு பெரும் முயற்சி எடுத்தார்.

  • இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களின் தலைநகர் நிலை
  • 2000 ஆம் ஆண்டு நவம்பரில் இருந்து டேராடூன் ஆனது உத்தரகாண்ட் மாநிலத்தின் "தற்காலிகத் தலைநகரமாக" செயல்பட்டு வருகின்றது.
  • கெய்ர்சைன் உத்தரகாண்டின் வருங்காலத் தலைநகராக கருதப்படுகின்றது.
  • ஒவ்வொரு ஆண்டும் கெய்ர்சைனில் ஒரு சட்டசபை அமர்வு நடைபெறுகின்றது.
  • மகாராஷ்டிரா மாநிலமானது இரண்டு தலைநகரங்களைக் கொண்டுள்ளது. அவை - மும்பை மற்றும் நாக்பூர் (இது மாநில சட்டசபையின் குளிர்காலக் கூட்டத்தை நடத்துகின்றது) ஆகும்.
  • இமாச்சலப் பிரதேசம் சிம்லா மற்றும் தர்மசாலா (குளிர்கால சட்டசபை அமர்வு) என இரு தலைநகரங்களைக் கொண்டு உள்ளது.
  • முன்னாள் ஜம்மு-காஷ்மீர் மாநிலமானது ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு (குளிர்கால சட்டசபை அமர்வு) ஆகிய தலைநகரங்களைக் கொண்டிருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்