TNPSC Thervupettagam

ஆந்திரப் பிரதேசத்தில் கோபி மீன்

February 12 , 2025 11 days 61 0
  • ஆந்திரப் பிரதேசத்தில் காக்கிநாடாவிற்கு மிக அருகிலுள்ள கோரிங்கா வனவிலங்குச் சரணாலயத்தில் ஹெமிகோபியஸ் ஹோவெனி & முகிலோகோபியஸ் டைக்ரினஸ் ஆகிய இரண்டு வகையான கோபி வகை மீன்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.
  • அவை இதற்கு முன்னதாக ஆந்திரப் பிரதேசத்தில் கண்டறியப்பட்டதில்லை.
  • இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் முதன்முறையாக M. டைக்ரினஸ் வகை இனம் கண்டுபிடிக்கப் பட்டதால் இந்த கண்டுபிடிப்பு குறிப்பிடத் தக்கதாகக் கூறப்படுகிறது.
  • இந்த இரண்டு இனங்களும் பொதுவாக "கோபி மீன்கள்" என்று அழைக்கப்படும் மீன் இனக் குழுவைச் சேர்ந்தவையாகும்.
  • பெரும்பாலான கோபி மீன்கள் கழிமுகப் பகுதிகளில், குறிப்பாக சதுப்புநிலங்களைச் சுற்றியப் பகுதிகளில் காணப்படுகின்றன.
  • 1988 ஆம் ஆண்டு முதல், ஆந்திரப் பிரதேசக் கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட மிக விரிவான ஆய்வுகளில் 352 இனங்கள் மற்றும் 140 குடும்பங்களை உள்ளடக்கிய 615 துடுப்புடைய மீன் இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  • இருப்பினும், கோபி மீன்கள் குறித்து அவ்வளவு விரிவாக ஆய்வு செய்யப்படவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்