அசாமில் உள்ள போபிதோரா வனவிலங்கு சரணாலயத்தில் ஆந்த்ராக்ஸ் நோயின் காரணமாக ஒரு எருமை மரணமடைந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
போபிடோரா வனவிலங்கு சரணாலயமானது உலகில் அதிக எண்ணிக்கையிலான ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களைக் கொண்டுள்ளது. காசிரங்கா சரணாலயத்தைப் போன்ற நிலப் பரப்பு மற்றும் தாவரங்களைக் கொண்டுள்ளதன் காரணமாக இது பெரும்பாலும் ‘மினி காசிரங்கா’ (சிறிய காசிரங்கா) என்று அழைக்கப்படுகின்றது.
ஆந்த்ராக்ஸ் என்பது பேசிலஸ் ஆந்த்ராசிஸ் எனப்படும் பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு கடுமையான தொற்று நோயாகும்.
இந்த நோய் பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் தொடர்பில் உள்ள மனிதர்களுக்கும் ஆந்த்ராக்ஸ் நோய் பரவும் தன்மை உடையது.
இது பொதுவாக மக்களுக்கிடையே நேரடியாகப் பரவுவதில்லை.
இது தோல், நுரையீரல், குடல் மற்றும் ஊசி போடுதல் என நான்கு வடிவங்களில் பரவலாம்.
இது தோல் மீது வீக்கமடைந்துள்ள பகுதி, அதனைச் சுற்றியுள்ள கொப்புளங்கள், மார்பு வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகின்றது.