ஓர் ஆய்வக அமைப்பில், நியூரான்களை இயக்கும் மற்றும் மறுசீரமைக்கும் திறன் கொண்ட மனித செல்களைப் பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் ஒரு சிறிய ரோபோக்களை (எந்திரங்களை) உருவாக்கியுள்ளனர்.
அவை 'ஆந்த்ரோபோட்ஸ்' என்று அழைக்கப்படுகின்றன.
இந்த உயிரிப் பொறியியல் அமைப்புகள் மனித மூச்சுக்குழாய் செல்களைக் கொண்டிருக்கின்றன என்பதோடு பல்வேறு வடிவங்கள் மற்றும் பரிமாணங்களில் இவை தங்களைத் தானாகக் கட்டமைக்கும் திறனைக் கொண்டுள்ளன.
மீளுருவாக்கம், மீட்பு மற்றும் நோய்களை மேலாண்மை செய்தல் ஆகிய பல்வேறு நோக்கங்களுக்காக இந்த உயிரி எந்திரங்கள் ஒரு புத்தாக்கமிக்க கருவிகளாக நன்கு பயன்படுத்தப் படலாம்.