TNPSC Thervupettagam

ஆனந்தி பென் படேல் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஆளுநராக நியமனம்

January 20 , 2018 2502 days 800 0
  • குஜராத் முன்னாள் முதலமைச்சர் ஆனந்திபென் படேலை மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஆளுநராக இந்திய ஜனாதிபதி நியமித்துள்ளார்.
  • தற்போது குஜராத் மாநில ஆளுநர் பதவியோடு மத்தியப் பிரதேச ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வகித்து வரும் ஓம் பிரகாஷ் கோலிக்கு பதிலாக ஆனந்திபென் படேலை மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • கர்நாடாகாவின் தற்போதைய ஆளுநராக இருக்கும் வஜூபாய் வாலாவை தொடர்ந்து குஜராத்திலிருந்து வரும் பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்த இரண்டாம் ஆளுநர் இவராவார்.
  • குஜராத்தின் முதல் பெண் முதலமைச்சரான படெல் அம்மாநிலத்தில் இருந்து வரும் முதல் பெண் ஆளுநராகவும் திகழ்கிறார்.
  • இவர் 1994ல் ராஜ்ய சபாவுக்கு தேர்வானார். 1998ல் குஜராத்தின் கல்வி அமைச்சரானார். 2002ல் பதான் தொகுதியில் மறுமுறை தேர்வு செய்யப்பட்ட பிறகு அதே துறையை கைப்பற்றினார். படெல் 2012ல் அகமதாபாத்தில் உள்ள கட்லோடியா தொகுதிக்கு மாறினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்