TNPSC Thervupettagam

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள உள்நாட்டு மர இனங்கள்

January 17 , 2024 313 days 346 0
  • ஆனைமலை புலிகள் வளங்காப்பகத்தின் மையப் பகுதியில் உள்ள உலாண்டி வனச் சரகத்தில் உள்ள அயல்நாட்டு ஆக்கிரமிப்பு இனங்களை அகற்றும் பணியை தமிழ்நாடு வனத் துறை மேற்கொண்டுள்ளது.
  • மேலும் அது உள்நாட்டு மரக்கன்றுகளை நடவும் திட்டமிட்டுள்ளது.
  • தேசிய வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியின் நிதியுதவியுடன் தரமிழந்த காடுகளின் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் இந்தப் பணிகள் செயல்படுத்தப் படுகின்றன.
  • தேசிய வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி 457 கோடி ரூபாய் கடனாக வழங்கிய இத்திட்டத்தின் கீழ், அடுத்த ஐந்தாண்டுகளில் மாநிலத்தில் உள்ள 33,290 ஹெக்டேர் தரமிழந்த வன நிலங்களை மீட்டெடுப்பதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஆனைமலை புலிகள் வளங்காப்பகத்தின் அனைத்து வனச் சரகங்களிலும் மொத்தம் 270 ஹெக்டேர் நிலம் மறுசீரமைக்கப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்