ஆனைமலை புலிகள் வளங்காப்பகத்தில் (ATR) வசித்து வரும் மூன்று பழங்குடியினர் குடியிருப்புகளுக்கு, 2006 ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தின் கீழ், கோவை மாவட்ட நிர்வாகமானது சமூக வன உரிமைகளை வழங்கியுள்ளது.
மேலும் மாவட்ட நிர்வாகமானது, இந்தச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் தனிப்பட்ட வன உரிமைகளை ATR வளங்காப்பகத்தில் உள்ள 14 குடும்பங்களுக்கு வழங்கியுள்ளது.
நகரூத்து I, நகரூத்து II மற்றும் சின்னார்பதி பழங்குடியினர் குடியிருப்புகளுக்கு மரப் பொருட்களைத் தவிர இதர மற்ற வனப் பொருட்களைச் சேகரிக்கச் சமூக உரிமை வழங்கப்பட்டது.
இந்தக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் மா, நெல்லிக்காய், தேன், புளி மற்றும் துடைப்பம் தயாரிப்பதற்கான புல் உள்ளிட்ட பல்வேறு சிறு வனப் பொருட்களைச் சேகரிக்கலாம்.
பழைய சர்க்கார்பதி பழங்குடியினர் குடியிருப்பைச் சேர்ந்த 14 குடும்பங்களுக்கு தனி வன உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.