பெண்கள் வாழ்வை பாதிக்கும் விஷயங்களைப் பற்றிய தகவல்களை பெண்களுக்கு அளிக்க ‘நாரி’ (NARI - National Repository of Information for Women) எனும் இணையவாயிலை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் துவங்கியுள்ளது.
பெண்களுக்கான அரசின் திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புகள் பற்றியத் தகவல்களை எளிதில் பெண்கள் அணுகுவதற்காக இந்த இணைய வாயில் துவங்கப்பட்டுள்ளது.
மத்திய மற்றும் மாநில அரசுகளால் பெண்களுக்காக ஏற்படுத்தப்பட்ட திட்டங்களைப் பற்றிய தகவல்கள் இந்த இணைய வாயிலில் இருக்கும்.
பெண்களுக்கான திட்டங்களை நிர்வகிக்கும் அமைச்சகங்கள், மத்திய அரசுத் துறைகள் மற்றும் தன்னாட்சி அமைப்புகள் போன்றவற்றோடு தொடர்பு கொள்ளும் வசதி இந்த இணைய வாயிலில் உள்ளதால் பெண்கள் எளிதாக அக்குறிப்பிட்டத் திட்டங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பங்களை மேற்கொள்ளவும், தங்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்துக் கொள்ளவும் இயலும்.