TNPSC Thervupettagam

ஆபத்தான கேனைன் டிஸ்டம்பர் (Canine Distemper Virus - CDV) வைரசிற்கு எதிரான தடுப்பூசி

October 9 , 2018 2110 days 781 0
  • குஜராத் வனத்துறையானது கிர் சரணாலயத்தில் ஆபத்தான கேனைன் டிஸ்டெம்பர் வைரஸ் (CDV ) மற்றும் புரோட்டோசோவா தொற்றுகளிலிருந்து பாதுகாப்பதற்காக சிங்கங்களுக்கு தடுப்பூசி போடுவதைத் தொடங்கியுள்ளது.
  • இந்த வைரஸானது குஜராத்தின் கிர் சரணாலயத்தில் குறைந்தபட்சம் 23 சிங்கங்களின் மரணத்திற்கு காரணமாகச் சொல்லப்படுகிறது.
  • 2015 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட கடைசி கணக்கெடுப்பின்படி கிர் சரணாலயத்தில் சிங்கங்களின் எண்ணிக்கை 523 ஆக இருந்தது.
  • உலகின் ஆசிய சிங்கங்களின் ஒரே வனவாழ்விடம் கிர் சரணாலயம் ஆகும்.
  • CDV ஆனது எளிதில் தொற்றக்கூடியதாகும். இது விலங்குகளின் இரைப்பை, சுவாசமண்டலம், மத்திய நரம்பு மண்டலம், நோயெதிர்ப்பு மண்டலம் மற்றும் பிற முக்கிய உறுப்புகளைத் தாக்குகிறது.
  • CDV ஆனது மிகவும் ஆபத்தான வைரசாக கருதப்படுகிறது. மேலும் இது கிழக்கு ஆப்பிரிக்க காடுகளின் 30% ஆப்பிரிக்க சிங்கங்களின் அழிவிற்கு காரணமாகியுள்ளது எனக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்