யுனெஸ்கோ அமைப்பானது கியுவ் மற்றும் எல்விவ் ஆகிய உக்ரேனிய நகரங்களில் அமைந்துள்ள உலகப் பாரம்பரியத் தளங்களை "ஆபத்திலுள்ள" உலகப் பாரம்பரியத் தளங்கள் என்ற பட்டியலில் சேர்த்துள்ளது.
இது 1,157 தளங்களைக் கொண்ட யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியப் பட்டியலில் இருந்து இந்தத் தளங்களை விலக்குவதற்கான முதல் படிநிலையாகும்.
இது புதிய அவசரகால நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதற்கான கூடுதல் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளுக்கான வாய்ப்பினை உருவாக்குகிறது.
தற்போதைய கியுவ் நகரில் உள்ள செயிண்ட் சோபியா கதீட்ரல் என்பது 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, அந்நகரத்தின் மிகவும் பிரபலமான அடையாளச் சின்னங்களில் ஒன்றாகும்.
போலந்து எல்லைப் பகுதிக்கு அருகில் உள்ள மேற்கு உக்ரேனிய நகரமான எல்விவ், இடைக்காலத்தின் பிற்பகுதியில் நிறுவப்பட்டது.
இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க மையமானது 1998 ஆம் ஆண்டில் உலகப் பாரம்பரியப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.