யுனெஸ்கோ அமைப்பானது, உக்ரைனின் கருங்கடல் கடற்கரையில் அமைந்துள்ள ஓர் உத்திசார் துறைமுக நகரமான ஒடேசாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க மையத்தினை ஆபத்தில் உள்ள உலகப் பாரம்பரியத் தளமாக அறிவித்துள்ளது.
ரஷ்யாவின் படையெடுப்பின் மூலமாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள இதற்கு சர்வதேச நாடுகளிடமிருந்து நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை நாடுவதற்கான வாய்ப்பினையும் இது ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தனது படையெடுப்பினைத் தொடங்கியதில் இருந்து ஒடேசா மீது பலமுறை குண்டு வீசித் தாக்கியுள்ளது.
ஒடேசாவின் நுண்கலை அருங்காட்சியகம் ஆனது 1899 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.
இந்த நகரம் ஆனது 18 ஆம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில், கையகப்படுத்தப்பட்ட ஒட்டோமான் கோட்டை அமைந்துள்ள இடத்திற்கு அருகில் நிறுவப் பட்டது.