TNPSC Thervupettagam

ஆபரேஷன் அமைதி வசந்தம்

October 21 , 2019 1769 days 734 0
  • இது வடகிழக்கு சிரியாவில் சிரிய ஜனநாயகப் படைகள் மற்றும் சிரிய இராணுவத்திற்கு எதிராக துருக்கிய ஆயுதப் படைகள் மற்றும் சிரிய தேசிய இராணுவம் நடத்துகின்ற  ஒரு இராணுவ நடவடிக்கையாகும்.
  • சமீபத்தில் அமெரிக்க நிர்வாகம் அமெரிக்கத் துருப்புக்களை வடகிழக்கு சிரியாவிலிருந்து விலகுமாறு உத்தரவிட்டது. இதுவரை அங்கு அமெரிக்கா தனது குர்திஷ் நட்புப் படைகளுக்கு ஆதரவளித்து வந்தது.
  • துருக்கியைப் பொறுத்தவரை, இந்த நடவடிக்கை எல்லைப் பகுதியிலிருந்து சிரிய ஜனநாயகப் படைகளை வெளியேற்றுவதையும், வடக்கு சிரியாவில் 30 கி.மீ தூரத்தில்  (20 மைல்) ஒரு "பாதுகாப்பான மண்டலத்தை" உருவாக்குவதையும், துருக்கியில் உள்ள 3.6 மில்லியன் சிரிய அகதிகளில் சிலரை அங்கு  மீள்குடியேற்றம் செய்யப்படுவதையும் நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியுடனான உறவின் காரணமாக சிரிய ஜனநாயகப் படைகளானது துருக்கியால் ஒரு பயங்கரவாத அமைப்பாக பார்க்கப் படுகிறது. ஆனால் சிரிய ஜனநாயகப் படைகளானது ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு (இஸ்லாமிய அரசு ஈராக் மற்றும் சிரியா) எதிராக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளால் நட்புப் படையாகக்  நாடாக கருதப் படுகிறது.

குர்துகள் பற்றி

  • குர்துகள் மேற்கு ஆசியாவின் மலைப் பிரதேசமான குர்திஸ்தான் என அழைக்கப்படும் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட ஈரானிய இனக் குழு ஆவர். இவர்கள்  தென்கிழக்கு துருக்கி, வடமேற்கு ஈரான், வடக்கு ஈராக் மற்றும் வடக்கு சிரியா வரை பரவியுள்ளனர்.
  • ஜனாதிபதி பஷர் அல் அசாத்துக்கு விசுவாசமான அரசாங்கப் படைகள், வேறு இடங்களில் சண்டையிடத் திரும்பியதால், சிரிய உள்நாட்டுப் போரில் போராடும் குர்துகள் வடக்கு சிரியாவின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்த முடிந்தது.
  • தங்கள் சொந்த அரசாங்கத்தை நிறுவிய பின்னர், அவர்கள் கூட்டாட்சி சிரியாவில் சுயாட்சிக்கு அழைப்பு விடுத்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்