இந்திய இராணுவப் படையானது “ஆபரேஷன் திருவள்ளூர்” என்ற ஒரு நடவடிக்கையினை மேற்கொண்டது.
இது கிட்டத்தட்ட 10 டன்எடையுள்ள வெடிக்காத இராணுவ ஆயுதங்களைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் ஒரு நடவடிக்கை ஆகும்.
இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம், திருவள்ளூரில் உள்ள கும்மிடிப்பூண்டியைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் குடிமக்களுக்குப் பாதுகாப்பான ஒரு சுற்றுச்சூழலை வழங்குவதே ஆகும்.
இராணுவப் படையின் தெற்கு காவற்படையின் கீழ் தக்சிண பாரத் பகுதி இந்த ஆபத்தான நடவடிக்கையை மேற்கொள்கிறது.