ஆப்கானிஸ்தானின் இடது கை சுழல் பந்து வீச்சாளரான ரஷீத் கான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக இளம் வயதில் டெஸ்ட் அணித் தலைவராக ஆனதன் மூலம் 15 ஆண்டு காலச் சாதனையை இவர் முறியடித்துள்ளார். (வயது 20 வயது 350 நாட்கள்).
முன்னதாக, ஜிம்பாபேயின் முன்னாள் விக்கெட் கீப்பர் தடெண்டா தைபு 20 வயது 358 நாட்களில் அணித் தலைவராக பொறுப்பேற்றுச் சாதனை படைத்திருந்தார்.