போபாலிலுள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமானது “ஆப்பிரிக்க ஊதா நிறப்பூச்செடி” (African Violet) எனும் புதிய ஒரு தாவர இனத்தினைக் கண்டறிந்துள்ளது.
இது மிசோரத்தின் சில பகுதிகளிலும் அதனை ஒட்டியுள்ள மியான்மரின் சில பகுதிகளிலும் காணப் படுகிறது.
போபாலின் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமானது இந்தப் புதிய இனத்தினை “டிடிமோகார்டஸ் விக்கிஃபுன்கியே” (Didymocarpus Vickifunkiae) என குறிப்பிட்டுள்ளது.
இவை “அருகி வரும் இனங்களாக” (endangered species) கருதப்படுகின்றன.