TNPSC Thervupettagam

ஆப்பிரிக்க ஒன்றிய உச்சி மாநாடு

February 10 , 2020 1658 days 632 0
  • ஆப்பிரிக்க ஒன்றிய உச்சி மாநாடானது எத்தியோப்பியாவின் தலைநகரான அடிஸ் அபாபாவில் நடைபெற்றது.
  • இந்த உச்சிமாநாடு ஆப்பிரிக்க கண்டத்தில் பயங்கரவாதத்தை சமாளிப்பதை நோக்கமாகக் கொண்டது.
  • இம்மாநாட்டின் கருப்பொருள் : “ஆயுதங்களைப் பயன்படுத்தாமை” என்பதாகும். 
  • இந்த ஆண்டின் தலைமை தென்னாப்பிரிக்காவால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  • இந்தியா சமீபத்தில் பாதுகாப்பு ஒப்பந்தமான லக்னோ பிரகடனத்தில் கையெழுத்திட்டதால் இந்த உச்சி மாநாடு இந்தியாவுக்கு முக்கியமானதாகக் கருதப் படுகின்றது.
  • ஆப்பிரிக்க ஒன்றியத்தின் பிராந்தியங்களில் பாதுகாப்புத் துறையில் கணிசமான அளவில் முதலீடு செய்வதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது.

ஆப்பிரிக்க ஒன்றியம்

  • ஆப்பிரிக்க ஒன்றியம் என்பது ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள 55 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஒரு கண்ட அளவிலான ஒன்றிய அமைப்பாகும்.
  • தலைமையகம் : அடிஸ் அபாபா, எத்தியோப்பியா.
  • லிபியத் தலைவர் முயம்மர் அல்-கடாஃபி தலைமையில் இந்த ஆப்பிரிக்க ஒன்றியத்தின் உருவாக்கமானது புதுப்பிக்கப்பட்டது.
  • சிர்டே பிரகடனம் மூலம் ஆப்பிரிக்க ஒன்றியம் நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்