ஆப்பிரிக்க ஒன்றியம் - G20 அமைப்பின் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து
September 13 , 2023 440 days 260 0
ஆப்பிரிக்க ஒன்றியம் ஆனது, 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 09 ஆம் தேதியன்று G-20 அமைப்பில் முழு உறுப்பினராக ஆனது.
இது G-20 அமைப்பினை வலுப்படுத்தச் செய்வதோடு, உலகளாவிய தெற்கு நாடுகளின் கோரிக்கைகளையும் வலுப்படுத்தும்.
ஆப்பிரிக்க ஒன்றியம் என்பது ஆப்பிரிக்க கண்டத்தினைச் சேர்ந்த 55 உறுப்பினர் நாடுகளை உள்ளடக்கிய செல்வாக்கு மிக்க அமைப்பாகும்.
இது தவிர, இந்தியா அரசானது G-20 மாநாட்டில் விருந்தினர் நாடுகளாக பங்கேற்று ஓர் அங்கம் வகிக்க வங்கதேசம், கொமரோஸ், எகிப்து, மொரீஷியஸ், நெதர்லாந்து, நைஜீரியா, ஓமன், சிங்கப்பூர், ஸ்பெயின் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய பல நாடுகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தது.
பிற சர்வதேச அமைப்புகளான பேரிடர் மீள்கட்டமைப்பு நெகிழ்திறன் கூட்டணி, நிதி நிலைப்பு மன்றம், ஆசிய வளர்ச்சி வங்கி, சர்வதேச நாணய நிதியம், சர்வதேச தொழிலாளர் அமைப்பு, சர்வதேச சூரிய சக்திக் கூட்டணி, பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு, ஐக்கிய நாடுகள் அமைப்பு, உலக வங்கி, ஆப்பிரிக்க ஒன்றியம், உலக சுகாதார நிறுவனம், உலக வர்த்தக நிறுவனம் மற்றும் ஆசியான் அமைப்பு ஆகியவையும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டன.