TNPSC Thervupettagam

ஆப்பிரிக்க வனம் மற்றும் சவானா (புல்வெளி) யானைகளின் எண்ணிக்கை குறைவு

March 29 , 2021 1212 days 815 0
  • ஆப்பிரிக்கக் காட்டு யானைகள் “மிகவும் அருகி வரும் இனங்களாக” சேர்க்கப் பட்டுள்ளன.
  • ஆப்பிரிக்க சவானா புல்வெளி யானைகள் அருகி வரும் இனங்களாக” சேர்க்கப் பட்டுள்ளன.
  • இது சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்தின் (International Union for Conservation of Nature – IUCN) அச்சுறுத்தல் நிலையில் உள்ள இனங்களின் மீதான சிவப்புப் பட்டியலால் செய்யப் பட்டுள்ளது.
  • இந்த இரு இனங்களும் இதற்கு முன்பு ‘பாதிக்கப்படக் கூடியவையாக’ கருதப் பட்டன.
  • மேலும் அவை இதற்கு முன்பு சிவப்புப் பட்டியலில் ஒரே இனமாகக் கருதப் பட்டது.
  • IUCN அமைப்பின் கூற்றுப் படி புதிய மரபணுச் சான்றுகள் கிடைக்கப் பெற்றுக் கொண்டு இருப்பதால் இந்த இரு இனங்களும் தனித்தனியே மதிப்பிடப் படுகின்றன.
  • கூடுதலாக, காட்டு யானைகள் மத்திய ஆப்பிரிக்காவின் வெப்பமண்டலக் காடுகளில் வாழ்வதால் அவை அரிதாகவே ஒன்றையொன்று சந்திக்கின்றன.
  • சவானா (புல்வெளி) யானைகள் புல்வெளிகள் மற்றும் பாலைவனங்களைக் கொண்ட ஆப்பிரிக்காவின் துணை  சஹாராப் பகுதிகளின் திறந்தவெளிகளில் வாழ்கின்றன.
  • கடந்த 31 வருடங்களில் ஆப்பிரிக்க யானைகளின் எண்ணிக்கை 86 சதவீதம் குறைந்து உள்ளது.
  • மேலும் IUCN அமைப்பின் கூற்றுப் படி, கடந்த 50 வருடங்களில் ஆப்பிரிக்க சவானா யானைகளின் எண்ணிக்கை 60 சதவீதம் குறைந்துள்ளது.
  • இரு இனங்களும் ஒரு சேர சுமார் 4,15,000 யானைகள் இந்தக் கண்டத்தில் உள்ளன.
  • தந்தத்திற்காகக் கடத்தப் படுதல் மற்றும் அவற்றின் இருப்பிடங்கள் வேளாண் பயன்பாட்டிற்கு ஏற்ப மாற்றப் படுதல் ஆகியவற்றால் இத்தகைய எண்ணிக்கை குறைபாடு உண்டாகிறது என காரணம் கூறப் படுகிறது.
  • இந்த மாற்றங்கள் 2008 ஆம் ஆண்டிலிருந்து நிகழ்ந்து கொண்டு இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்