TNPSC Thervupettagam

ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சல்

August 30 , 2023 454 days 252 0
  • ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சல் (ASF) என்பது பரவும் தன்மையுடைய வைரஸ் பன்றிக் காய்ச்சலாகும்.
  • இது 49 நாடுகளில் பரவியுள்ளது மற்றும் 2021 ஆம் ஆண்டு முதல் சுமார் 1.5 மில்லியன் விலங்குகளின் உயிரிழப்பிற்குக் காரணமாகியுள்ளது.
  • இந்த 49 நாடுகள் ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஓசியானியா ஆகிய ஐந்து வெவ்வேறு உலகப் பிராந்தியங்களில் அமைந்துள்ளன.
  • கால்நடைகளைப் பாதிக்கும் இந்த நோய்ப் பாதிப்பு ஆனது முதன்முதலில் கென்யாவில் 1921 ஆம் ஆண்டில் பதிவானது.
  • இந்த நோயானது 2023 ஆம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் மேகாலயா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் நோய்ப் பாதிப்பு பதிவானதைத் தொடர்ந்து இந்தியாவில் இன்னும் இந்நோய் பரவி வருகிறது.
  • இந்த நோய்க்கு இதுவரையில் எந்தச் சிகிச்சையும் இல்லை என்பதால் இதில் சில வகை பாதிப்புகள் ஒரு சில சூழ்நிலைகளில் 100% இறப்பு விகிதத்தைக் கொண்டிருக்கக் கூடும்.
  • இது பன்றிக் காய்ச்சல் போன்றது அல்ல.
  • இது பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் நேரடியாக தொடர்பு கொள்வதன் மூலம் பரவச் செய்கிறது.
  • இது உண்ணி போன்ற பூச்சிகள் மூலமாகவும் பரவும்.
  • மேலும் இந்த வைரசானது பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் பல மாதங்களும், உறைந்த நிலையில் வைக்கப் பட்ட இறந்த விலங்குகளில் பல ஆண்டுகளும் உயிர் வாழும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்