ஆப்பிரிக்கப் புளூம் எனப்படும் உயர் அழுத்தம் சார்ந்த நிகழ்வின் ஏற்பட உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளதால், ஐக்கியப் பேரரசு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கான வெப்ப அலை நிலையை எதிர் கொள்ள உள்ளது.
இது இதுவரை பதிவாகாத அளவிற்கான வெப்பநிலையை ஏற்படுத்தும்.
இந்த உயர் அழுத்த அமைப்பானது, மே மாத இறுதிக்குள் ஐக்கியப் பேரரசில் மிகவும் கடுமையான வெப்ப நிலைகளை ஏற்படுத்த உள்ளது.
அந்த சமயங்களில் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் வரை உயரும்.
இந்த வானிலை நிகழ்வானது, சஹாரா பாலைவனத்திலிருந்து ஐரோப்பாவினை நோக்கி வெப்பமான காற்றின் திரளான நகர்வாக வகைப்படுத்தப் படுகிறது.
இது அதிகபட்ச உயர் வெப்பநிலை நிலவும் நீண்ட காலகட்டத்தினைப் பல நாட்கள் அல்லது வாரங்களுக்கு நீடிக்கச் செய்கிறது.
வளிமண்டலச் சூழ்நிலைகளைப் பொறுத்து ஒவ்வொரு ஆண்டும் இதன் தீவிரம் மாறு படும்.