ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவில் சிங்கத்தின் IUCN பாதுகாப்பு நிலை
April 2 , 2025 2 days 33 0
IUCN அமைப்பானது, சிங்கத்திற்கான (பாந்தெரா லியோ) முதல் பசுமை நிலை குறித்த மதிப்பீட்டை வெளியிட்டுள்ளது.
இந்த இனம் ஆனது, 'அதிக எண்ணிக்கையில் குறைந்து போன இனம்' என்று இதில் தர வரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் புதிய மதிப்பீட்டுக் கருவி ஆனது, எண்ணிக்கை மிக முழுமையாக மீட்கப்பட்ட இனம், எண்ணிக்கையில் சற்று குறைந்த இனம், நடுத்தர எண்ணிக்கையில் குறைந்த இனம், அதிக எண்ணிக்கையில் குறைந்த ஒரு இனம், மிகவும் அதிக எண்ணிக்கையில் குறைந்த இனம், காடுகளில் அழிந்து விட்ட இனம் மற்றும் தீர்மானிக்க முடியாத ஒரு எண்ணிக்கை என ஒன்பது வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
சிங்கங்கள் முன்னர் ஆப்பிரிக்கச் சிங்கம் (பாந்தெரா லியோ லியோ) மற்றும் ஆசிய சிங்கம் (பாந்தெரா லியோ பெர்சிகா) என இரண்டு கிளையினங்களாக விவரிக்கப் பட்டன.
IUCN SSC பெரும்பூனை இனங்கள் நிபுணர் குழுவானது தற்போது சிங்கங்களை
பாந்தெரா லியோ லியோ (மத்திய ஆப்பிரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் காணப்படுகிறது) மற்றும்
பாந்தெரா லியோ மெலனோசையாட்டா (தெற்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் காணப்படுகிறது) எனப் பிரிக்கிறது.