காங்கோ ஜனநாயகக் குடியரசில் குரங்குக்காய்ச்சல் (mpox) பரவத் தொடங்கியது, ஆனால் தற்போது அது புருண்டி, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, ருவாண்டா மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட ஒன்பது ஆப்பிரிக்க நாடுகளிலும் பரவியுள்ளது.
குரங்குக் காய்ச்சல் பெருந்தொற்றானது கடைசியாக 2022-23 ஆம் ஆண்டில் தோன்றி, பின்னர் அதன் பரவல் தீவிரமடைந்துள்ளது.
இந்த நோய்த்தொற்று ஆனது 1980 ஆம் ஆண்டு திறம் மிக்க வகையில் ஒழிக்கப்பட்ட பெரியம்மை பாதிப்பினைப் போன்றதாகும்.
ஆனால் மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் mpox பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
வரலாற்று ரீதியாக, 1970 ஆம் ஆண்டில் காங்கோ ஜனநாயகக் குடியரசில் முதல் முறையாக மனிதனுக்கு mpox பாதிப்பு இருப்பதாக பதிவு செய்யப்பட்டது.
Mpox என்பது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் ஒரு விலங்குவழி தொற்று நோயாகும்.