TNPSC Thervupettagam

ஆப்பிரிக்காவின் கிழக்கு மற்றும் முனைப் பகுதி மற்றும் கிரேட் லேக்ஸ் பகுதி குறித்த ஐக்கிய நாடுகளின் அறிக்கை

July 1 , 2023 513 days 247 0
  • ஆப்பிரிக்காவின் கிழக்கு மற்றும் முனைப் பகுதி மற்றும் கிரேட் லேக்ஸ் (பெரும் ஏரி) (EHAGL) பகுதியில் தோராயமாக 11.71 மில்லியன் அளவில் உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்த மக்கள் வாழ்கின்றனர் (IDPs).
  • இந்த அறிக்கையானது, ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் முகமையில் உள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணைத்தினால் (UNHCR) வெளியிடப் பட்டுள்ளது.
  • முக்கியமாக புருண்டி, எத்தியோப்பியா, சோமாலியா, தெற்கு சூடான் மற்றும் சூடான் ஆகிய நாடுகளில் வாழும் உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்த மக்கள் தொகை முறையே 75,300, 2.73 மில்லியன், 3 மில்லியன், 2.23 மில்லியன் மற்றும் 3.7 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • கிழக்கு ஆப்பிரிக்காவின் புருண்டியில் நிகழும் பெரும்பாலான புலம்பெயர்வுகள் தீவிர சூறாவளி, அடைமழை மற்றும் வெள்ளம் போன்ற பருவநிலை தொடர்பான பல்வேறு சம்பவங்களால் ஏற்பட்டுள்ளன.
  • புருண்டி பருவநிலையினால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய 20 உலக நாடுகளில் ஒன்றாக உள்ளது.
  • எத்தியோப்பியாவில் நிகழும் புலம்பெயர்வானது, உள்நாட்டு மோதல்கள் மற்றும் பல இனங்களுக்கிடையேயான வன்முறை ஆகியவற்றின் காரணமாக ஏற்படுகிறது.
  • சோமாலியாவில் நிகழும் புலம்பெயர்வானது இன மோதல் /பாதுகாப்பற்ற நிலை (52 சதவீதம்), வறட்சி (31 சதவீதம்) மற்றும் வெள்ளம் (16 சதவீதம்) ஆகியவற்றின் காரணமாக ஏற்படுகிறது.
  • சூடான் நாட்டில், 2004 ஆம் ஆண்டு முதல் டார்ஃபூரில் நீண்ட காலமாக நிலவி வரும் பல மோதல்களின் காரணமாக உள்நாட்டுப் புலம்பெயர்வு ஏற்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்