TNPSC Thervupettagam

ஆப்பிரிக்காவின் துணை-சஹாரா பகுதிகள் குறித்த சர்வதேச நாணய நிதிய அமைப்பின் அறிக்கை

May 18 , 2023 430 days 203 0
  • சர்வதேச நாணய நிதியம் ‘புவிசார் பொருளாதாரப் பிரிவாக்கம்: ஆப்பிரிக்காவின் துணை-சஹாரா பகுதிகள் பிளவுறு நாடுகளுக்கிடையே சிக்கியது’ என்ற தலைப்பில் ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • புதிய பொருளாதாரப் பங்குதார நாடுகளான சீனா, இந்தியா மற்றும் இன்ன பிற நாடுகளுடனான பொருளாதார மற்றும் வர்த்தகக் கூட்டணிகள் ஆப்பிரிக்காவின் துணை-சஹாரா பகுதிகளுக்குப் பயனளித்துள்ளன.
  • தற்போதைய புவிசார் அரசியல் பிரச்சினைகளின் அதிகரிப்பினால், ஆப்பிரிக்காவின் துணை-சஹாரா பகுதிகளில் உள்ள நாடுகள் அதிக இறக்குமதி விலைகளால் பாதிக்கப் படும் சூழ்நிலையினை எதிர் கொள்ளச் செய்யலாம் அல்லது முக்கிய ஏற்றுமதிச் சந்தைகளுக்கான அணுகலை இழக்க நேரிடலாம்.
  • அதாவது பிராந்தியத்தின் சர்வதேச வர்த்தக மதிப்பில் பாதியளவு பாதிக்கப்படலாம்.
  • ஆப்பிரிக்காவின் துணை-சஹாரா பகுதியானது, 10 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீடு மற்றும் அதிகாரப் பூர்வ மேம்பாட்டு உதவி வரவுகளை இழக்கக் கூடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்